காவல் துறை வெளியிட்டுள்ள DIGICOP செயலியின் சிறப்பம்சங்கள் என்ன?

சென்னை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள டிஜிகாப் (DIGICOP) என்ற செல்போன் செயலியின் அம்சங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்...




சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து டிஜிகாப் (DIGICOP) என்ற செயலியை வெளியிட்டனர்.

                 
பொதுமக்களுக்கு காவல் துறையினர் அளிக்கும் சேவைவை எளிமைப்படுத்தும் வண்ணம் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.


செல்போன்கள் தொலைந்தால் இந்த செயலி மூலம் உங்களது செல்போனின் IMEI-ஐ பதிவு செய்து புகாரளிக்கலாம். மேலும், உங்களது புகாரின் நிலை என்ன என்பதையும் அடிக்கடி செக் செய்து கொள்ளலாம்.



நீங்கள் பழைய செல்போன் ஒன்றை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்றால், அது திருட்டு செல்போனா இல்லையா என்பதையும் இந்த செயலி மூலம் கண்டறியலாம். அந்த செல்போனின் IEMI எண்ணை பதிவு செய்தால் அது திருட்டு செல்போனா இல்லையா என்பதை சரிபார்க்கலாம்.

திருடர்களிடம் இருந்து போலீசார் கைப்பற்றிய செல்போன்களில் தகவல்களும் இதில் இருக்கும். உங்களது செல்போன் திருடப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும் இந்த ஆப் மூலம் கண்டறிந்து போலீசாரிடம் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த தகவல்களும் இந்த ஆப்-ல் இடம் பெற்றுள்ளது.


தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் முகவரி, தொடர்பு எண் ஆகியவையும் இந்த ஆப்பில் இடம் பெற்றுள்ளது.


காவல் துறை வெளியிடும் அறிவிப்புகள், செய்திகள் உடனுக்குடன் இந்த ஆப்பில் வெளியிடப்படுகிறது.


சென்னையில் எந்தப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது என்ற தகவல்களும் உடனுக்குடன் இந்த ஆப் மூலம் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment